🛒0 உள்நுழைய
🏠 முகப்பு 📖 எங்களைப் பற்றி 📰 இதழ்கள் ✍️ கட்டுரைகள் 📞 தொடர்பு
🔐 உள்நுழைய

எங்களைப் பற்றி

பசுத்தாய் மாத இதழ் | ஒரு சமுதாய ஆன்மீக மாத இதழ் | 1995 முதல்

வீரத்துறவி இராம கோபாலன்
✦ நிறுவனர் ✦

வீரத்துறவி இராம கோபாலன்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழகத்தின் பல துறவி பெருமக்களை சந்தித்து, இந்து முன்னணி பல சாதனைகள் புரிந்தபோதும் தமிழக இந்துக்களிடையே எழுச்சியோ, உணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறார்களே? என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.

பலரும் கூறிய பதில், நம்மிடம் ஒரு சாபம் இருக்கிறது. இன்று பல இடங்களிலும் மாட்டிறைச்சி கடை, பசுக்கள் வெட்டப்படுவதும் நடக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அந்த சாபத்திற்கு விமோச்சனம் கோ பூஜை செய்வதும், பசு பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் என்றுக் கூறினர்.

12.11.1995 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய அளவில் 10,008 இடங்களில் கோ பூஜை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பலனாக பல கோயில்களில், கிராமங்களில், கோ பூஜை மீண்டும் புத்துயிர் பெற்றது.

— பசுத்தாய் நிறுவனர்
பசுத்தாய் மாத இதழ்
✦ மாத இதழ் ✦

பசுத்தாய் மாத இதழ்

4 பக்கக் கடிதமாக பசுத்தாய் பிறந்தது. மக்களிடையே பசுவை போற்ற வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு செல்ல ஒரு செய்தித் தாள் கடித வடிவில் ஏற்படுத்துவது என முதன் முதலில் நவம்பர் மாதம் 1995 இல் நான்கு பக்க வடிவில் பசுத்தாய் எனும் பெயரில் அனுப்பப்பட்டது.

அதன் பிறகு பசுத்தாய் மாத இதழாக 1996 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாளாம் செப்டம்பர் மாதத்தில் பதிவு பெற்ற பத்திரிகையாக வடிவம் பெற்றது. 2007ஆம் ஆண்டு பசுத்தாய் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

தற்போது 20,000+ சந்தாதாரர்கள் மற்றும் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்டு, 36 பக்க ஆர்ட் பேப்பர் முழு வண்ண இதழாக வெளிவருகிறது.

1995 முதல் — கோமாதாவின் குரல்

சந்தா திட்டங்கள்

பசுத்தாய் மாத இதழை உங்கள் வீட்டுக்கு நேரடியாகப் பெறுங்கள். ஆன்மீகம், பசு பாதுகாப்பு, தேசபக்தி செய்திகள் மாதந்தோறும்.

📧 pasuthai@magazine.com
📍 ஈரோடு, தமிழ்நாடு

✨ ஆயுள் சந்தா (12 ஆண்டுகள்)

₹1500 / 144 இதழ்கள்
  • 36 பக்க ஆர்ட் பேப்பர் முழு வண்ண இதழ்
  • 12 ஆண்டுகளுக்கு நேரடி விநியோகம்
  • அனைத்து சிறப்பு மலர்களும் இலவசம்
  • ₹300 சேமிப்பு (₹1800க்கு பதில் ₹1500)
ஆயுள் சந்தா எடுக்க →

தொடர்பு & சந்தா

உங்கள் பயணத்தை பசுத்தாயுடன் தொடங்குங்கள்

📞

தொலைபேசி

86751 14301
🏦

வங்கி விவரம்

பசுத்தாய் அறக்கட்டளை
Punjab National Bank, Erode
IFSC: PUNB0623400
A/C: 6234000100032777

📍

முகவரி

எண்: 10, கிராமடை 7வது வீதி
சூரம்பட்டி, ஈரோடு – 638009

கொள்கை